-->

அண்மை

வாங்கடா - ஆலன்

வாங்கடா - ஆலன்

வாங்கடா
ஆணாதிக்க ஆம்பளைகளே
எங்களை
ஆண்மை இல்லைனா
ஹாஸ்பிட்டல் போங்க…
வானவில் அதிகமாகிட்டே இருக்கானுங்க…
அடுத்தத் தலைமுறைக்கு
என்ன கருமத்த
சொல்லித் தறிங்கடா கேவலவாதிகளா
என்னதா ஆச்சி நம்ம ஊருக்கு
இவனுகள கருணைக்கொலை பண்ணனும்
கத்திச்சண்டை வீரர்கள்
வீணாக்கப்பட்ட விந்துகள்
பொட்டை…
இப்படி ஆயிரமாயிரம் வன்மங்களை மட்டுமே
தருகிற ஆணாதிக்க ஆம்பளைகளே
எங்களை இழிவுபடுத்துவதோடு திரும்பத்திரும்ப
பெண்களை இழிவுபடுத்துவதுதான்
நீங்களும் உங்கள் குறிகளும்
பெண்குழந்தைகளையும் சில நேரம்
ஆண்குழந்தைகளையும்
உங்கள் ஆதிக்கக் குறிகள்
சிதைத்துக் கொண்டே இருக்கின்றன
இப்படியான நீங்கள்தான்
பெண்களைப் போகமாகப் பார்ப்பதும்
அடிமைப் படுத்துவதும்

மூளையில்லா அறிவில்லா ஆம்பளைகளே
பேருந்து நிலையத்தில்
எந்த ஆண் தொட்டான்?
எந்த வானவில் தோழர்களால்
உங்க ஆதிக்க ஆம்பளைகளுக்கு
வல்லுறவு நடந்தது? பாலியல் சீண்டல் நடந்தது?
எப்பெண்களை இழிவுபடுத்தினார்கள்
எக்குழந்தையைச் சீண்டினார்கள்?
எங்களைச் சீண்டியதெல்லாம்
உங்கள் ஆதிக்கக் குறிகள்தான்
புரியலையா உங்க வாயை மூடி வையுங்கடா
அறிய விரும்பினால்
தெரிந்து கொள்ளுங்கடா
தற்குறி முட்டாள் ஆம்பளைகளே

தன்பால் ஈர்ப்பாளர்கள்
உள்ளிட்ட மக்களை
அறியாது உங்கள் வாய்கள்
எங்கள் வசைபாடுவதையே கொண்டிருக்கும்
வாய்களையும் குறிகளையும்
அடக்கி ஒடுக்கி வைத்துக் கொள்ளுங்கள்
எங்களைப் பேசுவதற்கு
உங்களின் வாய், சுன்னிகளுக்குத் தகுதியில்லை
போங்கடா
போய்த் தொலைங்கடா.

___

மழையால் குளிரடங்கியும்
ஈரப்பதத்தோடும்
இழுத்துப் போர்த்திய கதகதப்பில் இருக்கும்போது
அவன் இருந்திருந்தால் எப்படியிருக்கும்
நான் அவன்மேல் படுப்பதும்
அவனைச் சீண்டுவதும்
ஒவ்வொரு மழைக்காலங்களிலும்
பனிக்காலங்களிலும்
உடல்நலமில்லாக் காலங்களிலும்
கற்பனைக்கனவாகி காலங்களும்போய்
செத்துப்போய்விடுவேனோ
இப்படி நினைத்தே கலங்குகிறது….
ஒவ்வொரு ஆண்டும் வருகின்றன
மழைக்காலமும் பனிக்காலமும்
உடல்நலமில்லாக் காலமும்
இப்படியே ஒவ்வொரு ஆண்டும் போய்த்தொலைந்துவிடுகின்றன
அவன்மட்டும் இருப்பதில்லை
கனவுமட்டும் இருக்கிறது
நான் மட்டுமே இருக்கின்றேன்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு