-->

அண்மை

யட்சியின் மரணம் - விஜயராஜமல்லிகா (மலையாளத்திலிருந்து தமிழுக்கு மோனிகா.க)


யட்சியின் மரணம்

யட்சி மறைந்தது!
ஒப்பனையலங்காரத்தில் பொதிந்த
கொழுத்த மார்பும்,
கொழுகொழுத்த தொடைகளும்,
நரம்புத்தடயங்களும்,
பறவைகள் கொத்திக் கிழித்தது,
விழிகள் நிலைத்தது,
சுற்றங்களோடி மறைந்தது,
சாட்சியான காலம் மௌனத்திலாண்டது,

சுயமதிப்பை மேன்மைப்படுத்த,
இன்றும் அந்த யட்சியின் ஆன்மா
கனவைச் சுமக்கும் நாடோடியாய்

என்னிலிருந்து, உன்னிடத்தும்
உன்னிலிருந்து, பிறரிடத்துமாய்.....


இரை

என்ன வன்முறையிது!
ஒரு பெண்ணை இப்படிக் காயப்படுத்துவதா?
பதினைந்து பதினாறு வயதில் துவங்கியதல்லவா இந்த வன்முறை

அறையில்,வகுப்பறையில்,
குளியலறையில், மாந்தோப்பில்,
மைதானத்தில்,ஏன் தூக்கத்தில் கூட இப்படி!

ஏன் என்னைப் பின்தொடர்கிறாய்
நாட்காட்டி பதினைந்து மாற்றிவிட்டேன்

தலைமுடியில் சுண்ணாம்புக்காற்று வீசத் துவங்கிவிட்டது
இப்போதும் நான் உன்னுடைய இரையா?

நீ ஏற்படுத்தும் காயங்கள் எனக்கு நீங்காத துக்கம்
இது பாலியல் வன்முறை!
அம்பும் வில்லுமாய் என்னில் இறங்கிக்கொண்டேயிருக்கும்
காமதேவா திஸ் இஸ் டூ மச்


நீ பார்த்தாயா?

பெற்று வளர்த்தவரின்
தனிமைச் சங்கமத்தில்
சுவரை உடைத்தும்,
ஓட்டை விலக்கியும்,
கட்டிலுக்கடியில் மறைந்தொளிந்தும்,
மறைகண்ணால் பார்த்த நீ
திகைத்துப்போயிருப்பாய்

இல்லையெனில்
எப்படி இவ்வாறு
எங்கள் படங்களுக்கடியில் வந்து

எண்ணெய் முடிந்து விட்டதை
எண்ணி வருந்துகிறாய் நீ?
கோலாட்டம் என்று
உறுதிப்படுத்துகிறாய் நீ?
நீ பார்த்தாயா?

Author Picture

விஜயராஜமல்லிகா

தெய்வத்தின் மகள் என அழைக்கப்படும் விஜயராஜமல்லிகா, மலையாள இலக்கியவெளியில் குயர் சார்ந்த குறிப்பிடத்தக்க படைப்புகளை இயற்றிவரும் கவிஞரும் முன்னணி திருநங்கை எழுத்தாளரும் ஆவார். இவர் எழுத்தாளர் மட்டுமல்லாமல், ஆசிரியர், பேச்சாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். இவரது படைப்புகள் மரபு ஒழுங்குகளைக் கேள்விக்குட்படுத்தி, காதல், பாலின அடையாளம், மற்றும் கேரள குயர் சமூகத்தின் அனுபவங்களைத் தீவிரமாக ஆராய்கின்றன. தெய்வத்தின் மகள், ஆண்நடி, ஆணல்ல பெண்ணல்ல கண்மணி, பெண்ணயவளுடே கவிதகள் போன்றவை இவரது முக்கியமான படைப்புகளாகும்.

Author Picture

மோனிகா.க

கேரளா, பாலக்காட்டைச் சேர்ந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர். தற்போது கேரளப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

மின்னஞ்சல் - monikakannan2507@gmail.com

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு