1. இன்னொரு மகாகாவியம் எழுதப்படும்
மரங்களின் கொப்புக் கிளைகளைப் பற்றிக்கொண்டு நிற்கிறேன்
சுற்றிலும் பசி அவமானம்
பேதாபேதங்களின் எல்லைக்கோடுகள்
கனவுப்பறவைகள் தொலைவில் சென்றுவிட்டன
எங்கள் பால்யத்தையும் இழந்துவிட்டோம்
பருவங்களைத் தொட்டுப் பார்க்கிறேன்
உடைந்த இதயத்துடன்
நதியில் நீச்சலடிக்கிறேன்
வானத்தைப் பார்க்கிறேன்
பாடல் பாடுகிறேன்
காற்று வீசிக்கொண்டே இருக்கிறது
நான் துயரத்தின் சொற்களைத் தேடுகிறேன்
மற்றுமொரு மகாகாவியம் எழுதுவதற்காக.
2. நீ இங்கேதான் இருந்தாய்
இங்கே ஒரு நாள் இருந்தது எங்கள் நெல்வயல்
விடிந்தால் நடந்துசெல்வோம் அதனிடம்
தலைசாய்ந்த நெற்பயிர்கள் அணைத்துக்கொள்ளும் என்னை
மிகுந்த காதலுடன்
வாழ்வின் துயரக்கோடுகளை அழித்துவிடும்
என்னை அழைத்துச் சொல்லும் -
“வா அருகில் வா
நான் இருக்கிறேன்.”
இன்று எல்லாம் நினைவுகள்
எல்லை தாண்டி நான் செல்லும்போதெல்லாம்
அது என்னிடம் சொல்கிறது -
“நீ இங்கேதான் இருந்தாய்.”
3. நமது பிள்ளைகளின் யுத்தம்
வீதியில் நமது பிள்ளைகளின் யுத்த விளையாட்டு
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
முன்னேறிச் செல்கிறேன் நேராக
கொலையாளியைப் பழிதீர்க்க
ஆழ்ந்த பெருமூச்சுடன்
அடக்குமுறையாளனின் கைகளை உடைக்கிறேன்
பனிக்காலத்தின் குளிர்க்காற்று வீசிக்கொண்டிருக்கிறது
நடுக்கும் குளிரில் பார்க்கிறேன்
அப்பா நின்றுகொண்டிருக்கிறார்
கையில் கிழிந்த போர்வையுடன்
அவர் கண்களிரண்டும் நனைந்திருக்கின்றன.
4. முதுகுத்தண்டை நேராக வைத்து
எனது இருப்பிலிருந்து பிறப்பெடுக்கிறது ஓர் எழுதுகோல்
எங்களது வேதனைகளைப் பற்றி எழுதுவதற்காக
தீண்டப்படாதவர்களின் வாழ்க்கைத் துயரங்களை எழுதுவதற்காக!
நெஞ்சின் ஆழத்தில் பெரும்பாறை
மண்
நெருப்பு
நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் பாய்கிறது
எங்களது துயரங்களின் சொற்கள்
கவிதையின் தடைசெய்யப்பட்ட மொழி
சப்புக்கொட்டி ருசிக்கிறது அதன் சுவையை
கடும் மணம்
இப்போது நான் தலைநிமிர்ந்து நடந்து செல்கிறேன்
முதுகுத்தண்டை நேராக வைத்து.
5. இதற்குப் பெயர்தான் வாழ்க்கை
இங்கே முதிய கருவேலமரங்களின் வனம்
பிறந்ததிலிருந்து கனத்த பெருமூச்சு
ஆகாயத்தில் நட்சத்திரங்களின் நெருப்பு எரிகிறது
இங்கே சிதறடிக்கப்பட்டது எங்கள் நாகரிகத்தின் தொல்வரலாறு
விடியும்போது மூதாதையர்கள் நடந்துபோய்விடுகின்றனர்
வயலைக் கடந்து
வனத்தைக் கடந்து
நதியைக் கடந்து
கைப்பிடியளவு நெல்மணிகளைக் கொண்டுவருவதற்காக
சிறகுகளில் இரத்தக் காயங்களுடன் பறந்து வருகிறது பருந்து
சுற்றிலும் இவ்வளவு வேதனைகள் அவமானங்கள்
நெஞ்சாங்கூட்டை உலுக்குகின்றன
இருந்தும் பொறுக்கி எடுத்துக்கொண்டேன் சில கனவுகளை
புகலிடமற்ற வேரில்
துயரவீட்டின் குடும்பத்தில்
விழிகளுக்குள் மேகத்தின் நிழல்
மழையின் பாடல்
இதற்குப் பெயர்தான் வாழ்க்கை.
6. எங்கேயும் போக அனுமதி இல்லை
எங்களுக்கு எங்கேயும் போக அனுமதியில்லை
ஒரே இடத்தில் நின்றுகொண்டே இருப்பதைத்தவிர
சுற்றிலும் முள்கம்பி வேலிகள்
இருந்தாலும் இந்தக் கால்களிரண்டும் முன்னேறிச் செல்ல விரும்புகின்றன
இந்தக் கைகள் இரண்டும் கைப்பற்றத் துடிக்கின்றன விடுதலையை
எனது இதயம்
வானம் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது.
7. நீ விருட்சமாகி நிற்கும்போது
வீடெங்கும் நிறைந்திருக்கும் அந்தகாரத்தின் நடுவில்
தேய்ந்து கொண்டிருக்கும் நிலவு மூழ்கிவிடுகிறது
ஆயிரம் மாற்றங்களுக்கு நடுவிலும்
வேதனையின் குரல்களைக் கேட்க முடிகிறது
இரவு முழுக்க
ஒரு கவிதை எழுதப்படுகிறது
மண்ணின் கவிதை
வனத்தின் கவிதை
மீண்டும் நாம் சந்தித்துக்கொள்வோம்
நீ விருட்சமாகி நிற்கும்போது.