-->

அண்மை

பன்றிப்பாடல் - எம்.பி.மனோஜ் (மலையாளத்திலிருந்து தமிழுக்கு மோனிகா.க)



ஒரு பன்றிக்கும் எனக்குமிடையேயான வித்யாசம்
உடையில் மட்டுமே
முதுகை வளைத்து, கீழே பார்த்து,
வேலிக்குள்ளேயே கிடைப்பதெல்லாம் திண்ணுகிறது

மலம், எச்சில், சிறுநீர், கழிவுகள்
என்னுடைய தட்டிலும் வந்து சேர்கிறது

கழுத்தில் கருத்த கயறு கட்டி
மொளக்குச்சியில் இழுத்துக்கட்டப்படவில்லையெனினும்
நான் எங்கும் ஓடமாட்டேன்!

நக வெட்டிக்கும் பயம் தரும் நகங்கள் ,
கட்டையிலும்,கல்லிலும் உரைக்கின்ற தோல்

ஒரு பன்றிக்கும் எனக்குமிடையேயான வித்யாசம்
காலணியில் மட்டுமே.

சிலரின் பார்வை என்னை அறியாமலேயே
என்னைப் படம் பிடிக்கிறது
அனுதாபம் என்ற பெயரில்

வேலியைக் கூட உடைக்க முற்படாமல்
உணவு தேடும் உக்திகள்
இங்கு கூட இருக்கின்றன போலும்!

ஆண்டாண்டுகளாக எனது கூட்டில்
ஆழாக்கு, உழக்கு, இறுணித் தூணி வடிவத்தில்
இவைகளுக்கான உணவு
குடும்பத்தலைவரின்
வரவு செலவில் ஒதுக்கப்பட்டுள்ளது

ஒரு பன்றிக்கும் எனக்குமிடையேயான வித்யாசம்
மீசை மட்டுமே.
அப்படியிருக்கையில்
திடீரென
மீன்சாறு,காளைப்பண்டம் ,ரொட்டிமிச்சம் என்பன
யாரும் அறியாமல்
என் காலனியை வந்து சேர்ந்தது
மிகவும் மென்மையாக
எங்கள் பெயரை அழைத்து
வேட்பாளர்களில் ஒருவன்
கோடாலியிலோ, சுத்தியலிலோ
நடு மண்டையில் அடிக்க
நான் மேலே பார்ப்பேன்
என் கையைப் பிடித்து உயர்த்துவான்
பின்பு வெட்டியெரிவான்

என்னுடைய மாமிசம் அவன் தட்டில்
என்னுடைய தோல் அவன் பல்லில்
என்னுடைய நெய் அவனுடைய வயற்றில்!

விடியற்காலையில் பன்றிக்கூட்டில்
அவனுடையவும்,
அவனின் மகனுடையவும்
தலைமுறையான தானம்!
Author Picture

எம்.பி.மனோஜ்

மலையாள தலித் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிவருபவர், கவிஞர், நாவலாசிரியர். நொண்டித்தனத்தின் எழுபது ஆண்டுகள், கண்ணுன்னிலோகாஷரம், ஃபோர்ஃபுட் வாக்கர்ஸ், பாவே பாவே போகவதா, புத்தராபம் என்பன இவரின் கவிதைத் தொகுப்புகள்.

Author Picture

மோனிகா.க

கேரளா, பாலக்காட்டைச் சேர்ந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர். தற்போது கேரளப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

மின்னஞ்சல் - monikakannan2507@gmail.com

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு