-->

அண்மை

ஸ்ரீதர் கவிதை



இந்தப் பார்வை வேண்டாம் இவர்களைப் பார்த்து

அனுதாப பார்வை வேண்டாம்
அன்பு பார்வை போதும்
பாவமாய் பேச வேண்டாம்
பாசத்தோடு பேசுங்கள்
உங்களுக்குள்ளே மௌனம் பேச வேண்டாம்
உரக்கப் பேசுங்கள் நாங்களும் பேசுவோம்

ஆச்சரியப்படாதீர்கள்
அனைத்தையும் அறிந்து கொள்ள
வாய்ப்புகள் உருவாகி உருவாய் இருக்கிறது
தீட்டு என்று நினைக்காதீர்கள்
திரும்பிப் பாருங்கள்
அழகாகத்தான் இருக்கிறோம்
பார்வைதான் இல்லை

அருகில் அமர பயப்படாதீர்கள்
அறிவும் இருக்கு உடன்பிறப்போடு பழக
காதலும் வரும் கனவும் வரும்
புரிந்து கொள்ளுங்கள்
புண்படுத்த வேண்டாம்
புன்னகையாய் பேசுங்கள்
உள்ளமும் இருக்கு உணர்ந்திட
உணர்வுகளும் இருக்கு ரசித்திடுவோம்
கற்பனை கண்டு

உதாரணப் படுத்தாதீர்கள்
ஊக்கப்படுத்துங்கள் உலகம் அறியட்டும்
பார்வைதான் இல்லை
பழக முடியும் பழகிடுங்கள்
பாவப் பார்வை வேண்டாம்

Author Picture

சிந்தனைத் தூறல் ஸ்ரீதர்

கவிஞர், மாற்றுத்திறனாளருக்கான கணினி பயிற்றுநர். மாற்றுத்திறனியம் சார்ந்த கலை இலக்கியச் செயல்பாட்டில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு